வன்னியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்தது.

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று (10) தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தது.
வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலாநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் வடமாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, மற்றும் முன்னாள்போராளி யசோதினி, சமூகசெயற்பாட்டாளர் மூர்த்தி, வர்த்தகர் அ.றொயன் ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
