
வடக்கு - கிழக்கு மீனவர்களிற்கான சீனாவின் பொருத்து வீடுகளைத் தொடர்ந்து அரிசியும் நேற்று மாவட்டங்களிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
சீன அரசினால் வடக்கு - கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கெண்டெயினர்கள் மூலம் ஏற்கனவே எடுத்து வரப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 50 கிலோவாக பொதி செய்யப்பட்ட அரிசியும் நேற்று முதல் எடுத்து வரப்படுகின்றது. இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய 7 ஆயிரத்து 436 மூடைகளில் 2 ஆயிரத்து 200 மூடை அரசி நேற்று எடுத்து வரப்பட்டு குருநகரில் களஞ் சியப்படுத்தப்பட்டது.
இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் அரிசியுடன் ஏனைய அரிசிகளும் மாவட்டத்திற்கு கிடைத்தவுடன் எதிர் வரும் 13ஆம் திகதி இவை மீனவர்களிற்கு வழங்கப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
