திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை கட்சி ஆதரிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. குகதாசனை சந்தித்த போதே இதனை வலியுறுத்தினர். 20 பேர் இந்தச் சந்திப்பில் பங்குகொண்டிருந்தனர். அவர்களில் 19 பேர் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தனர்.
அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியனுக்கு எதிராக கிழக்கு மாகாண தமிழரசு கட்சியினர் மத்தியில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் இருவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராகப் பலரும் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை தமிழரசு கட்சி எடுக்க வேண்டும், இல்லையேல் தங்களின் மனச்சாட்சிக்கு அமைவாக முடிவெடுக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவான நிலைமை அதிகரித்துவரும் பின்னணியிலேயே திருகோணமலை தமிழரசு கட்சிக்குள் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
