வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக் மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.

1 year ago


வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக் மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.

ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளிக்கு செல்லும் விண் வெளி வீரர்கள் சில சமயங்களில் தங்களின் விண்கலத்தை விட்டு வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியதுயுள்ளது.

இது விண்வெளி நடைபயணம் என அழைக்கப்படுகிறது. முறையாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் கவச உடைகளை அணிந்து கொண்டு விண்வெளி நடைபயணத்தை மேற் கொள்கின்றனர்.

இந்த நிலையில் வணிக ரீதியில் தொழில்முறை விண்வெளி வீரர் அல்லாத தனிநபர்களை விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள வைப்பதற்கான முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறு வனம் இறங்கியது.

இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் 15 நிமிடங்கள் விண் வெளியில் நடைபயணம் மேற் கொண்டார்.

அதன் பின்னர் அவர் விண்கலத்துக்கு திரும்பினார்.

அண்மைய பதிவுகள்