வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி
6 months ago







வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது.
இதையடுத்து யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
