தமிழக மீனவர்கள் கைது, இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால்.-- அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை, இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிகோரி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது, மீண்டும் 08 மீனவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் இந்த இறையாண்மைக்குச் சவால் விடுப்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டில் மட்டும் தமிழக கடற்றொழிலாளர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள் ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
