ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவு.
10 months ago


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை விதிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பரப்புரை, பேரணி, துண்டறிக்கை விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற் பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை - ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான பரப்புரைக் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
