ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சில விமானங்கள் இரத்து
8 months ago

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும் தாமதமாகலாம் என்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நேற்று மாலை 6.35 இக்கு சென்னை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 123 என்ற விமானமும், இந்தியாவின் சென்னையிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்படவிருந்த யு எல் 124 என்ற விமானமும் இரத்து செய்யப்பட்டன.
அத்துடன் புதுடில்லி, அவுஸ்திரேலியாவின் மெல் போர்ன் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன என ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
