நிதி இன்மையால் நீர்கொழும்பில் இடம்பெறும் தேசிய போட்டியான கடற்கரை கைப்பந்து தேசிய போட்டிக்கு கிளிநொச்சி வீரர்கள் இருவர் அழைத்துச் செல்லப்படாதமை கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தின் வீரர்களே தேசிய போட்டிக்கு தெரிவாகியும் அழைத்துச் செல்லப்படவில்லை.
இவர்களுக்கான தேசிய போட்டி நீர்கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு தெரிவான வீரர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்படவில்லை.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவியபோது, நீர்கொழும்பில் ஒருநாளைக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். அதற்கான நிதி தம்மிடம் இல்லை என்று பதிலளித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பல தரப்பட்டவர்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
