முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத்திட்டத்தில் 100 கோடி ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்தார். -
தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவுக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரட்நாயக்கவுக்கும், கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்கவுக்கும் முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
