2025 ஆரம்பத்தில் இலங்கையில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவிப்பு

1 year ago



அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாகும்.

அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தொடர்ந்தும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அந்த வங்கி தெரிவித்தது.