
கத்தாரில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா எல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் கத்தாரில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று நபர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று அவர்களை கத்தார் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், கத்தார் நாட்டுக்குச் சென்ற மூவரும் அங்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் நாடு திரும்பியுள்ளதோடு இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை வெலிசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
