
தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதி குழாம் விதித்த மரண தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பில், பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில், இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, பிரதிவாதிகளுக்கு அறிவித்தார்.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக, பிரதிவாதிகளுக்கு நீதிபதி ஆதித்ய படபாண்டிகே தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
