
திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் பிருந்தாவன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மாவை சேனாதிராஜாவின் உடல்நலம், அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு, அவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
