மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (18) நடைபெற்றது.





"புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (18) நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது வாழைச்சேனை இந்து கல்லூரி முன்பாக ஆரம்பமாகி, கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயிலிருந்து அவர்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையிலான இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் தனியார் நிறுவனம் மற்றும் பெண்கள் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
நடைப் பயண நிறைவில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கும் நடைபெற்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
