உலகில் புற்றுநோயாளர் எண்ணிக்கை 18 மில்லியனாக அதிகரிப்பு - வைத்தியர் யோகா அந்தோனி தெரிவிப்பு
உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் வைத்தியர் யோகா அந்தோனி தெரிவித்துள்ளார்.
புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும் விழிப்புணர்வினால் அதனை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் அவர் இதன்போது கூறினார்.
ஆண்களுக்கு பொதுவாகக் காணப்படும் வாய்ப் புற்றுநோய் வெற்றிலை உண்பதினால் ஏற்படுவதாகவும், புகைப்பிடிப்பதினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மதுபானம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
