
இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் காஸாவில் உயிரிழப்பு.
காஸா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் நேற்றுக் காலை 9 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து பலஸ்தீன ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர் என்று காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஸா மருத் துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஜூன் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காஸா நகரத்திலிருந்து சுமார் 80, 000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ. நா. அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்ரேலின் போரில் 38, 098 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 87, 705 பேர் காயமடைந்தனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண் ணிக்கை 1,139 என தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்தோடு, ஆயி ரக்கணக்கான மக்கள் காஸாவில் இன்னும் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
