யாழ்.மாவட்ட எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.



யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - போலவத்த பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண்ணே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கு காரணமான வாகன சாரதி கைது செய்யப்பட்டு மாரவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹலவத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
