இலங்கையில் பழநுகர்வு 2023 இல் 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்னாக அதிகரிப்பு - விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் பழநுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெற்றிக் தொன்) அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நாட்டின் வருடாந்தப் பழங்களின் தேவை 19.6 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். (196,9371 மெற்றிக் தொன்). 2023ஆம் ஆண்டு பழ உற்பத்தி அதிகரிப்பைப் பார்க்கும் போது வாழை, மா, அன்னாசி, பப்பாளி போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர, 2023 ஆம் ஆண்டில் பழங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
அதன்படி, 38,201 மெற்றிக்தொன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் வாழை உற்பத்தி ஹெக்டேருக்கு 19.5 மெற்றிக் தொன்னாகவும், மா உற்பத்தியை 9.5 மெற்றிக் தொன்னாகவும், பப்பாளி 45 மெற்றிக் தொன்னாகவும், அன்னாசி 14 மெற்றிக் தொன்னாகவும் ஆரஞ்சு பழத்தை 30 மெற்றிக் தொன்னாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரக இனப் பெருக்கம். கலப்பின இரகப் பெருக்கம். அதிக அடர்த்தி கொண்ட பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, தாவர ஊட்டச்சத்து அறிமுகம், பயிர் சேதத்தைக் குறைத்தல், அறிமுகப்படுத்துதல் போன்ற பல தொழில்நுட்ப நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என விவசாயத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமனி ரணதுங்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
