ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிறார்.
1 month ago

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் CIDயில் முன்னிலையாகவுள்ளார்.
மருந்து இறக்குமதி தொடர்பாக கெஹலிய ரம்புக்வெல்ல முன்னதாக CIDயில் முறைப்பாடு அளித்திருந்தார். இந்தப் முறைப்பாடுடன் தொடர்புடைய விசாரணைகளின் கீழ், கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஏற்கனவே CIDயில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அமைச்சரவையின் கூட்டு பொறுப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
