
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய நிலையில் தனது துணை அதிபர் வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி, மினசோட்டா மாநிலத்தின் ஆளுநர் டிம் வால்ஸ் அவர்களை துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து எதிரணியில் களம் காணுகிறார் இந்திய வம்சாவளிப் பெண்மணி கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் 99 சதவிகிதத்தினரின் வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் சுமார் 4,567 பேர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு சற்றே அதிகரித்திருப்பது, தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
