யாழில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவர்களை பஸ் மோதியதில் வயோதிபர் உயிரிழந்ததுடன், மகன் காயம்

யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவர்களை பஸ் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (வயது 76) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பெரியவிளான் பற்றிமா தேவாலயத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தவரும், அவரது மகனும் வீதியோரமாக இருந்துள்ளனர்.
அவ்வேளை வீதியில் பயணித்த பஸ் இருவரையும் மோதியுள்ளது.
அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், தந்தை உயிரிழந்துள்ளார். மகன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தையடுத்து பஸ் சாரதி பஸ்ஸை விபத்து நடைபெற்ற இடத்தில் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
