கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்திய, இலங்கையின் அபிவிருத்தி நிதியுதவியை மீண்டும் வழங்க இணக்கம்




கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரி வித்துள்ளது.
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தபோதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.
அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரிய எக்ஸிம் வங்கியின் பணிப்பாளர் வொன்சுக் ஹா, பிரதிப் பணிப்பாளர் ஹனுய் ஹன், திட்ட முகாமையாளர் நளின் ஜயதுங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
