சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை.-- கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவிப்பு
7 months ago

தற்போது சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாகக் கடந்த காலங்களில் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள கால் நடை பண்ணைகளின் உரிமையாளர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்மைய, கால்நடை வைத்தியர்களால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
