இலங்கையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட 6 ஆளுநர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர்.
9 months ago

இலங்கையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட 6 ஆளுநர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர்.
இவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுவதால் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கீழ் கடந்த 2019 டிசெம்பர் தொடக்கம் 2021 ஒக்ரோபர் வரையிலும் 2023 மே மாதம் தொடக்கம் நேற்று வரையிலும் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் வடக்கு மாகாண ஆளுநராக பதவியில் இருந்தார்.
இதேவேளை, ஊவா, வட மத்திய, சப்ரகமுவ உட்பட 5 மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
