


கனடாவில், விமான நிறுவனம் ஒன்று ஒரு இந்தியத் தம்பதியருக்கு விமானத்தில பயணிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலிருந்து வான்கூவ ருக்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள் போரூர் குமணன், கல்பனா தம்பதியர். விமானத்தில் ஏறுவதற்காக செல்லும்போது, அவர்கள் கையில் வைத்திருந்த அனுமதிக்கப்பட்ட அளவிலான பைகளுடன் அவர்கள் விமானத்தில் ஏற பணியாளர் ஒருவர் அனுமதி மறுத்துள்ளார்.
தங்களுக்குத் தேவையான மருந்துகளும் விலையுயர்ந்த நகைகளும் பையில் இருப்பதால், பையை சரக்குகள் வைக்கும் இடத்தில் வைக்க இயலாது என குமணன் கூற, இந்த விமான நிறுவ னத்தின் விமானத்தில் இனி நீங்கள் ஒருபோதும் பயணிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ஒரு பணியாளர்.
வேறு வழியில்லாமல், கடைசி நேரத்தில் ஃப்ளேர் விமான நிறுவன விமானம் ஒன்றில் 1,927 டொலர்கள் செலுத்தி டிக்கெட் வாங்கி பயணித்திருக்கிறார்கள் தம்பதியர்.
இந்தச் சம்பவத்தால் கோபமடைந் துள்ள குமணன், நாங்கள் என்ன குற்றவாளிகளா என்கிறார். விமான நிறுவனத்துக்கு நடந்ததை விளக்கி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள குமணன், டிக்கெட்டுக்கான தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளார்.
வெஸ்ட்ஜெட் விமான நிறுவன செய்- தித் தொடர்பாளரான ஜூலியா கெய்சரை ஊடகங்கள் இந்த புகார் தொடர்பாக தொடர்பு கொண்டபோது, குமணன் தம்பதியர் தங்கள் விமான நிறுவன விமா னத்தில் பயணிக்க தடையேதும் விதிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய 800 டொலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
விமானத்தில் ஏறும்போது அந்த பயணிகள் நடந்துகொண்ட விதம் காரணமாகத்தான் அவர்கள் விமனத்தில் பய ணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலியா தெரிவித்துள்ளார்.
இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளும் பயணிகளை வெஸ்ட்ஜெட் நிறுவனம் பொறுத்துக் கொள்வதில்லை என்றும் ஜூலியா கூறியுள்ளார்.
ஆனால், கடைசி நேரத்தில் மற்றொரு விமானத்தில் பயணிக்க நேர்ந்ததால் கூடுதலாக செலவான 1,127 டொலர்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
தான் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் குமணன், தங்கள் மருந்துகளையும் விலையுயர்ந்த நகைகளையும் விமானத்தில் ஏற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் அந்தப் பணியாளர் அதை சட்டை செய்யவில்லை என்றும், ஆகவே, தான் அப்செட் ஆனதால் சத்தமாக பேசினார் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ஒரு ஜிப் லாக் பை கொடுத்திருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். அல்லது அவர்கள் தனக்கு ஏதாவது ஒரு தீர்வு கூறியிருக்கலாம் என்கிறார் அவர்.
அவர்கள் எனக்கு முழு செலவையும் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்றும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என் பதற்கு எனக்கு விளக்கமளிக்கவேண்டும் என்றும் கூறுகிறார் குமணன்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
