தற்கொலை முயற்சிகளால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆயிரம் பேர் வரையானோர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ நிபுணர் முத்துலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தலைமையில் மருத்துவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட மருத்துவர் நவநீதன், தற்கொலைகள், தற்கொலை முயற்சி கள் அதிகரித்து வருகின்றன. யாழ். போதனா மருத்துவமனையில் 750 முதல் ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தற்கொலை முயற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், 75 - 100 பேர் வரையிலானவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
