கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

5 months ago



கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பாடசாலை ஒன்றில் இல்ல மெய்வன்மைப் போட்டியில் கனகபுரம் துயிலுமில்ல நுழைவாயில் போன்று அலங்கரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் தலைமையகத்துக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளார்.

அந்த அலங்கார வடிவமைப்புக்கு உதவிய மாணவர்களின் பெயர்ப்பட்டியலைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.