யாழ்.போதனா வைத்தியசாலையினுள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல்
9 months ago








யாழ்.போதனா வைத்திய சாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அந்தத் தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள். இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
