இலங்கை விமானப் படையின் விமானங்களை தமது தேவைக்கு 15 முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்தினர்.-- விமானப்படை தலைமையகம் தெரிவிப்பு

கடந்த காலங்களில் இலங்கை விமானப் படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக 15 (முன்னாள்) அமைச்சர்கள் பயன்படுத்தியதாக இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.
முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும், தயா கமகேவுக்கு ஒரு விமானமும் சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும், வஜிர அபேவர்த்தனவுக்கு ஒரு விமானமும், ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும், எம்.எச். எம். ஹலீமுக்கு ஒரு விமானமும், ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும், ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஒரு விமானமும், நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங் களும், சஜித் பிரேமதாஸவுக்கு 25 விமானங்களையும், அலி சப்ரி இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
