அறகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்காவிட்டால் இலங்கை பங்களாதேஷ் போல் மாறி இருக்கும் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு.

அறகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்கி இருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷ் போல் மாறி இருக்கும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நல்லாட்சியின்போது அரசுடன் இணைந்து செயற்பட்டவர்களும் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். (தேசிய மக் கள் சக்தி) அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் நிச்சயம் வாக்களிக்கமாட்டார்கள்.
கள்வர்களை பிடிப்போம் எனக் கூறியே நல்லாட்சியின்போது வந்தனர். தற்போதும் அதே கோஷ த்துடன் வந்துள்ளனர்.
நாட்டில் அறகலய ஏற்பட்டது. மக்களின் பிரச்சினையைவிட சூழ்ச்சிக்காரர்கள் முந்திக்கொண்டனர்.
அன்று நாம் ஓர் அடி பின்வாங்கி இருக்காவிட்டில் இந்நாடு பங்களாதேஷ் போல் ஆகி இருக்கக்கூடும்.
போருக்கு கட்டளையிட்ட நானோ அல்லது கோட்டாபய ராஜபக்ஷவோ மக்கள் மீது ஒரு தோட்டாவைக்கூட பயன்படுத்துவதற்கு இடமளிக்க வில்லை - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
