
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 7, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 7, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களில் 5, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 2, ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் உள்ள 2 நீர்த்தேக்கங்களில் 1 நீர்த்தேக்கத்திலும் நீர் வழிந்து செல்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 5, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 2, வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் இதுவரையில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
