இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் தேர்தல் நாளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் தேர்தல் நாளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக களப் பணிகளில் மனிதவ உரிமை கள் ஆணைக்குழுவினர் ஈடு படவுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊட கங்களுக்கு அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவித்தவை வருமாறு,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, “ஜனாதிபதித் தேர்தல் - 2024" கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற் கொள்ள ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்துக்கு களப்பயணம் மேற்கொள்வதற்கும் ஆணைக் குழுவின் அலுவலர்கள் கடமையிலிருப்பார்கள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகமும் எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் கண்காணிப்பு கடமைகளுக்காக திறந்திருக்கும். அத்துடன், வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவ தில் ஏதேனும் உரிமை மீறலை எதிர்கொண்டால் 021-222 2021,- 070-365 4910 தொலைபேசி இலக்கங்களு டன் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
