
கனடாவில் இரண்டு கைகளும் இல்லாத பெண் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக அந்தப் பெண் சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொண்டு ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஒஸ்போர்ன் என்ற பெண்ணே இவ் வாறு ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த பெண் பிறக்கும் போது இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார் என்பதுடன் கால்களும் உயரம் குறைந்தவையாகக் காணப்பட்டன.
மொன்றியாலில் பிறந்த ஒஸ்போர்ன் றொரன்டோவில் வளர்ந்தார் என்பதுடன் பின்னர் ஹமில்டனுக்கு குடிபெயர்ந் துள்ளார்.
பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒஸ்போர்ன், லாஸ் வேகாசில் வாழ்ந்து வருகின்றார்.
இரண்டு கைகளும் இல்லாத கால்க ளின் உயரமும் குறைந்த இந்த பெண்ணுக்கு செலுத்தக்கூடிய வகையிலான வாகனம் ஒன்றை விசேடமாக வடிவமைக்க வேண்டி இருந்தது.இதற்காக சுமார் ஒரு லட்சம் டொலர்கள் தேவைப்பட்டன.
ஒஸ்போர்ன், ஏழு ஆண்டுகால கடின முயற்சியின் பின்னர் வாகனத்தை விசேடமாக வடிவமைத்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள் ளார்.
ஃபுச்சியா மினி கூப்பர் ரகக் காரில் அவர் நீட்டிக்கப்பட்ட அக்ஸிலேட்டர் மற்றும் பிரேக் பெடல்கள், தொடுதிரை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஸ்டீயரிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி காரை ஓட்ட முடியும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
