முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சகோதரரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த அரச வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
9 months ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சு. சதாசிவத்தின் சகோதரரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த அரச வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சு. சதாசிவத்தின் சகோதரரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த அரச வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நுவரெலியாவிலுள்ள அவரின் வீட்டிலேயே இந்த வாகனம் கைப்பற்றப்பட் டது.
அரசாங்கத்தால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் தகவல் அளிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்ட விரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த வாகனம் மீட்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
