ஹெல்மட் திருடப்பட்டமைக்கு எதிராக அநுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் போராட்டம்!
10 months ago

அநுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.
இதனால், அநுராதபுரம் முதல் காங் கேசன்துறை வரையான ரயில் சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன.
ரயில் நிலையத்துக்குச் சொந்தமான வாகன தரிப்பிடத்தில் ரயில்வே கட்டுப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசம் அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லாதமையே இத்திருட்டுச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவித்து ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவினரால் போராட்டம் முன்னெ டுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக அநுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி வரையான பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
