போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் முகவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததால், அவர் தலைமை குடிவரவு அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில் நுட்பச் சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்தப்பெண்ணின் தகவல்கள் பதிவு செய்து போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
