விடுதலைப் புலிகளின் சீருடையின் ஒருதொகுதி, V8 ரக வாகனம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சுஜீவ சேரசிங்கவின் வீட்டில் சோதனை

விடுதலைப் புலிகளின் சீருடையின் ஒருதொகுதி, V8 ரக வாகனம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாணந்துறை வலன ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழு வீட்டுக்குச் சென்றதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் இல்லை எனவும், வீடு மூடப்பட்டிருந்ததாகவும், ஊழியர் ஒருவரே அங்கு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டின் பகுதியில் மூன்று பழைய வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், சுமார் 2 மணிநேரம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தான் வீட்டில் இல்லாத நேரத்தில், பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வந்த சிலர் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
உண்மையிலேயே காவல்துறை அதிகாரிகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென, கொள்ளுப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் பதிவாவிடம் கேட்டபோது
பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு செயலணியின் அதிகாரிகள் நீதிமன்றத் தேடுதல் உத்தரவுக்கு அமையவே அங்கு தேடுதலை நடத்தியுள்ளனர் என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
