இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதிமோசடியில் ஈடுபடுகின்றன
                                                                                                        
                                                        
                                                        10 months ago
                                                    
                                                
                                            
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளாத நிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதிமோசடியில் ஈடுபட்டுவருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், இதுதொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி புதிய வாகனங்களுக்காக சில நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ரூபாவை முற்பணமாகப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்
 
                                
                                ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
                                
                                சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
 
                                
                                ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
                                
                                 
                                                





