
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மூத்த போராளி பொன் மாஸ்டர் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் வடக்குப் பிரதேச அமைப்பாளர் ச.செல்லகாந்தன் நினைவுச் சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் உருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
