மட்டக்களப்பு - காத்தான்குடி கல்லடி வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

1 year ago



மட்டக்களப்பு - காத்தான்குடி கல்லடி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்லடியைச் சேர்ந்த 48 வயதான பொது சுகாதார பரிசோதகர் ஒருவரே கடந்த புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சடலம் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் அப்பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.