
மெட்டா நிறுவனத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், "பேஸ்புக்" சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் "மெட்டா" நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும் வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு முறைப்பாடு செய்தது.
இதுபற்றி 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.
இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ (ரூ.7 ஆயிரத்து 120 கோடி) அபராதம் விதித்துள்ளது.
ஆனால், போட்டியாளர்களும் வாடிக்கையாளர்களும் எவ்வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
