முல்லைத்தீவில் 6 வகையான பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல.--கமநல அமைப்புகள் சுட்டிக்காட்டு

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.
காலநிலை அனர்த்தங்களால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம் உரிய முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கோரியுள்ளனர்.
சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக சுமார் 338,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை இழப்பீடாக வழங்கப்படும் என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன நேற்று முன்தினம் அறிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த இழப்பீட்டுத் தொகை தமக்கு போதுமானதாக அமையாது என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீரற்ற காலநிலையினால் தங்களது பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதற்காக அரசாங்கம் உரிய வகையில் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
