மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி 96 ஆயிரத்து 975 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.




நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 96 ஆயிரத்து 975 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
முன்னாள் எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் 65 ஆயிரத்து 458 விருப்பு வாக்குகளையும், முன்னாள் எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் 22 ஆயிரத்து 773 விருப்பு வாக்குகளையும், இளையதம்பி சிறிநாத் 21 ஆயிரத்து 202 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி 55 ஆயிரத்து 498 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது.
அந்தக் கட்சியின் சார்பில் கந்தசாமி பிரபு 14 ஆயிரத்து 856 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40ஆயிரத்து 139 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 32 ஆயிரத்து 410 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 31 ஆயிரத்து 256 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.
கடந்த தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றிருந்தமையுடன் இராஜாங்க அமைச்சுப் பதவியை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
