வன்முறைகளற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாகிறது கபே பணிப்பாளர் தெரிவிப்பு

ஜனநாயகத்தை மதிக்கின்ற - வன்முறைகளற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப் பொருளில் வவுனியாவில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற நிலவரத்தையும் பார்க்கும் போது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகளற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக் கின்றோம்.
இதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம்.
அதே போல இந்த பொதுத் தேர்தலிலும் இதுவரை பெரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.
சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கை வழங்குகின்றன.
இவற்றை நாம் கண்காணிக்கும் போது வேட்பாளர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக் கூடிய போலிப்பிரசாரங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது.
எனவே அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமாணம் ஒன்றை பெறுகின்றோம்.
எனவே, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்கவேண்டும்.
வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
