
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதிகமானோர் வெளிநாடு செல்ல முயற்சிப்பதால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இன,ஐக்கியத்துடன் கூடிய புதிய கடவுச்சீட்டு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.
கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கு அதிக பணம் செலவழிப்பதுடன் சில முகவர்களால் ஏமாற்றப்படுகின்றனர் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
