
18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வடக்கு - கிழக்கில் கனமழை பொழியும்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வங்காள விரிகுடா வில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக்குகின்றது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் மேலைக் குழப்பமும், மேடன் யூலியன் அலைவின் வருகையும் இருப்பதனால் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மிகக் கன மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் நிரம்பு நிலையை அடைந்துள்ளது.
கிழக்கு மாகாணங்களின் முக்கிய குளங்களான சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை, கந்தளாய், வாகனேரி, கடுக்காமுனை, நவகிரி, வீராகொட, றுகம் குளம் போன்றன கிட்டத்தட்ட அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
வடக்கு மாகாணத்தின் பிரதான குளங்களான இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன் கட்டு, கணுக்கேணி, தண்ணிமுறிப்பு போன்றன தற்போது மேலதிக நீரை வெளியேற்றுகின்றன.
இந்த சூழ்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கிடைக்கும் கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகளிலும், குளங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மக்களும் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
முன்னரே குறிப்பிட்டபடி இன்றும் நாளையும் மழை சற்று குறைவாக இருக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகளே உங்கள் நிலையை எண்ணி மிகவும் வேதனையடைகின்றேன்.
உங்களுக்காகவேனும் இந்த பெரு மழை பொய்த்து போக வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் - என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
