எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதனால் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் துறந்தேன்-- மாவை சேனாதிராசா தெரிவிப்பு

எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதனால் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் துறந்தேன்-- மாவை சேனாதிராசா தெரிவிப்பு
எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் துறந்தேன் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
"எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்துக்கான வலுவான சக்தியாக மாற்றுவதற்காக பணி யாற்றவுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
என்னைப் பொறுத்த வரையில் என்னால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணத்தாலேயே நான் பதவியில் இருந்து விலகினேன்.
இருப்பினும் நான் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுவேன்.
அதேநேரம், கட்சியில் இருந்து பலர் வெளியேறி வெவ்வேறு தமிழ்த் தேசிய பாதையில் பயணிக்கின்ற கட்சிகளில் பலர் போட்டி யிடுகின்றார்கள்.
இந்த நிலைமையானது எனக்கு கவலையளிப்பதாக உள்ளது.
இருப்பினும் அவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியச் சிந்தனையில் உள்ள தளத்தில் பயணிப்பதால் சற்று நிம்மதியாகவுள்ளது.
எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறாகப் போட்டியிடுகின்றவர்கள், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் என்று அனைவரையும் ஒன்றிணைக்கின்ற பயணியை நான் தேர்தலின் பின்னர் முன்னெடுக்கவுள்ளேன்”- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
