இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என நாமல் தெரிவிப்பு.
11 months ago

வடக்கு - கிழக்கை இணைக்க அனுமதிக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் ஜனா திபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பேருவளையில் இடம் பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இணைந்த வடக்கு-கிழக்கில் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு- கிழக்குக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
