
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் வெள்ளிக்கிழமை (19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது கோவாவின் தென்மேற்கே உள்ள கார்வார் கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
MV Maersk Frankfurt என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. தீ விபத்தில் கப்பலின் முன் பகுதி வெடித்துள்ளது. தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கப்பலில் பிலிப்பைன்ஸ், மாண்டினெக்ரின் மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்துள்ளனர்
கப்பலில் தீ மேலும் பாரவாமல் இந்திய கடலோர காவல்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
